தமிழகம்

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாற்றுத்திறனாளி திடீர் மரணம்: கைது செய்து போலீஸ் பிடியில் இருந்தபோது சம்பவம்

செய்திப்பிரிவு

போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட மாற்றுத் திறனாளி திடீரென மரணம் அடைந்தார்.

தமிழக அரசு துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். 40 சதவீதம் ஊனம் இருந்தாலே உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது உட்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8-ம் தேதி முதல் மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசின் முதன்மை செயலர் கு.ஞானதேசிகனை நேரில் சந்தித்து மனுவும் கொடுத்தனர்.

அரசின் கவனத்தை ஈர்க்க மீண்டும் போராட்டம் நடத்த நேற்று முன்தினம் காலையில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சென்னையை நோக்கி மாற்றுத் திறனாளிகள் வாகனங்களில் வந்தனர். இதை யறிந்த போலீஸார் அவர்களை ஆங்காங்கே கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் அடைத்து வைத்தனர். கைது செய் யப்பட்டு அடைக்கப்பட் டிருந்த மாற்றுத் திறனாளிகள் அங்கேயும் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இரவு 10.30 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேலூர் மாவட்டம் காட்பாடி மாத னூர் ஆத்தோரம்பட்டியை சேர்ந்த குப்புசாமி (67) என்பவர் திடீரென தலைசுற்றுவதாக கூறி, ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதைக் கண்டு மற்ற மாற்று திறனாளிகள் அதிர்ச்சியடைந்தனர். அவரை உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிரசிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த குப்புசாமி நேற்று அதிகாலை 3.30 மணியள வில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் மற்ற மாற்றுத் திறனாளிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘குப்புசாமி யின் சாவுக்கு தமிழக அரசுதான் காரணம். குப்புசாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ச்சியாக போராட்டம் நடத்துவோம்' என்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்ட விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலத்தை சேர்ந்த ராஜாராம்(40) என்பவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். போராட்டத்தில் இறந்த குப்புசாமி மற்றொரு மாற்றுத் திறனாளியின் உதவிக்காக வந்திருக்கிறார். இவ ருக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.

திமுக சார்பில் ரூ. 1 லட்சம்

போராட்டத்தின்போது உடல் நலக் குறைவால் உயிரிழந்த மாற்றுத் திறனாளி குப்புசாமி குடும்பத்துக்கு திமுக அறக்கட் டளை சார்பில் ரூ. 1 லட்சம் வழங் கப்படும் என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டி ருந்த குப்புசாமியின் உடலுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின் அஞ்சலி செலுத்தினர். ராயப்பேட்டை மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வரும் மாற்றுத் திறனாளி ராஜாராமையும் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் குப்புசாமி உயிரிழந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT