அமைச்சர்களின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து நேற்று வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் மீது நேற்று 2-வது நாளாக விவாதத்தில் தேமுதிக கொறடா வி.சி.சந்திரகுமார் பேசினார். அப் போது நடந்த விவாதம் வருமாறு:
வி.சி.சந்திரகுமார் (தேமுதிக):
தேமுதிகவை எதிரிக்கட்சியாக பார்ப்பதால், எனது தொகுதியில் பல்வேறு பணிகள் நடக்கவில்லை.
அமைச்சர் தோப்பு வெங்கடா சலம்:
ஈரோடு ஜவுளித்தொழில் மிகுந்த பகுதி என்பதால், அங்கு பொது சுத்திகரிப்பு மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப் பட்டது. இதையடுத்து ஈரோடு, நாமக் கல் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கி ரூ.700 கோடியில் பொது சுத்திகரிப்பு மையம் அமைக்க பூர்வாங்க பணிகள் நடந்து வருகின் றன. முதல்வரின் கருணையால் தான் நீங்கள் இங்கே அமர்ந்திருக் கிறீர்கள். இதற்காக முதல்வரை நீங்கள் நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும்.
சந்திரகுமார்:
நாங்கள் உங்களு டன் கூட்டணி வைக்காவிட்டால், நீங்கள் அமைச்சர்களாக இங்கு இருக்க முடியாது.
அமைச்சர் வைத்திலிங்கம்:
உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு நீங்கள் ஒரு இடம்கூட பெறவில்லையே.
அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்:
உள்ளாட்சித் தேர்தல் மட்டுமல்ல, நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெறவில்லை. மக்கள் உங்களை முற்றிலும் நிராகரித்து விட்டனர். இனி எந்தத் தேர்தலிலும் வெற்றி பெறப்போவதில்லை. சட்டப் பேரவை தேர்தலில் உங்களுக்கு ‘ஜீரோ’தான்.
தொடர்ந்து சந்திரகுமார் கூறிய வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக பேரவை தலைவர் தனபால் அறிவித்தார்.
சந்திரகுமார்:
நான் பேசியதை நீக்கி விட்டீர்கள். அப்படியானால் அமைச்சர்கள் பேசியதையும் நீக்க வேண்டும்.
பேரவைத் தலைவர் தனபால்:
ஆதாரம் இல்லாமல் பேசியவை அவைக்குறிப்பில் ஏறாது. நீங்கள் வேறு விஷயத்தை பேசுங்கள்.
சந்திரகுமார்:
அமைச்சர்கள் பேசியதையும் நீக்க வேண்டும்.
நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல் வம்:
பேரவை தலைவருக்குதான் உத்தரவிட உரிமை உள்ளது. உறுப்பினர் உத்தரவிட முடியாது.
அமைச்சர்கள் பேசியதையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று பேரவைத் தலை வரிடம் சந்திரகுமார் தொடர்ந்து கோரிக்கை விடுத்தார். அதை பேர வைத் தலைவர் ஏற்காததால் சந்திர குமார் தலைமையில் தேமுதிக உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
புறக்கணிப்பு
பின்னர் அவைக்கு வெளியே நிருபர்களிடம் சந்திரகுமார் கூறியதா வது: பேரவையில் நான் பேச ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே அமைச்சர்கள் அனைவருமே எழுந்து நின்று 10 நிமிடங்களுக்கு மேலாக என்னையும் தேமுதிகவை யும் விமர்சித்தனர். அதற்கு பதில ளித்து நான் பேசியதை எல்லாம் அவைக்குறிப்பில் இருந்து பேர வைத் தலைவர் நீக்கிவிட்டார். ஆனால், அமைச்சர்கள் செய்த விமர்சனத்தை நீக்கவில்லை.
அவையில் தேமுதிக உறுப்பினர் கள் எதுவும் பேசக்கூடாது என்று அமைச்சர்களும் பேரவைத் தலைவரும் திட்டமிட்டு இப்படி மோசமாக நடந்து கொள்கின்றனர். எனவே, இந்தக் கூட்டத்தொடரின் எஞ்சியுள்ள இரு தினங்களிலும் தேமுதிக உறுப்பினர்கள் பங்கேற்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.