தமிழகம்

தகவல் உரிமை சட்டத்தின்படி தகவல் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

செய்திப்பிரிவு

தகவல் உரிமை சட்டத்தின்படி ஆன்லைன் வாயிலாக, தகவல்பெற விண்ணப்பிக்கும் வசதியைஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

பேரவையில் நேற்று கேள்விநேரத்தில், பேரவை காங்கிரஸ்கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை பேசும்போது ‘‘தகவல்அறியும் உரிமைச் சட்டம், ஐக்கியமுற்போக்கு கூட்டணி ஆட்சியில்கொண்டுவரப்பட்டது. அப்போதைய முதல்வர் கருணாநிதியும்அதை வரவேற்று, சட்டத்தை அமல்படுத்தினார். தொகுதிதோறும்,தகவல் ஆணையத்தின் கிளை அலுவலகம் அமைத்தால், மக்களுக்கு வசதியாக இருக்கும்’’ என்றார்.

இதற்கு பதில் அளித்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘‘இந்தச் சட்டத்தைமுதன்முதலில் அமல்படுத்தியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதிதான். ஆணையத்தின் தலைமை அலுவலகம் சென்னையில் உள்ளது. தொகுதிகள்தோறும் கிளைஅலுவலகம் தேவையில்லை. ஒவ்வொரு அலுவலகத்திலும் தகவல்அறியும் உரிமைச் சட்டப்படி தகவல் அளிக்க, தகவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேல்முறையீட்டை தலைமைதகவல் ஆணையர் அலுவலகத்தில் செய்யலாம். மேலும், தகவல் பெறுவதை டிஜிட்டலாக்கி, ஆன்லைன் மூலம் விரைவாக தகவல்கிடைக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்’’ என்றார்.

SCROLL FOR NEXT