தமிழகம்

ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மதுரை-இலங்கை இடையே மீண்டும் விமான சேவை: தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதி

செய்திப்பிரிவு

ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, மதுரை-இலங்கை இடையே மீண்டும் விமான சேவை தொடங்கியது. தடுப்பூசி போட்ட வர்களை மட்டுமே பயணிக்க அனுமதித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரோனா பரவலால் 2020 மார்ச் முதல் விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மதுரை-இலங்கை விமானப் போக்குவரத்தும் நிறுத் தப்பட்டது.

இந்நிலையில், தளர்வுகளுடன் விமானப்போக்குவரத்து தொடங்கிய நிலையில் மதுரை- இலங்கைக்கு விமானம் இயக் கப்பட்டது. கடந்த ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு, தற்போது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 38 பயணிகள் மதுரை விமான நிலையத்துக்கு வந்தனர்.

அவர்களுக்கு விமான நிலையத்திலுள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள் கரோனா பரிசோதனை செய்தனர்.

மதுரையில் இருந்து நேற்று இலங்கைக்கு புறப்பட்ட விமானத்தில் 76 பயணிகள் பயணித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கரோனா பரிசோ தனை மற்றும் தடுப்பூசி போட் டவர்கள் மட்டுமே விமானத்தில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT