தமிழகம்

ராமதாஸின் நெருங்கிய உறவினர் காங்கிரஸில் இணைந்தார்

செய்திப்பிரிவு

பாமக நிறுவனர் ராமதாஸின் நெருங்கிய உறவினரும், புதுச்சேரி பாமக முன்னாள் மாநில செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவு மான அனந்தராமன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

புதுச்சேரி மாநில பாமக செயலா ளராக இருந்தவர் அனந்தராமன். டாக்டர் ராமதாஸின் நெருங்கிய உறவினர். முன்னாள் எம்எல்ஏவான இவர் கடந்த மக்களவை தேர்த லில் பாமக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அப்போது பாஜக கூட்டணியில் போட்டியிடுவ தாகக் கூறி என்.ஆர்.காங்கிர ஸுக்கு நெருக்கடி தந்தார். இந் நிலையில் நேற்று இவர் தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸில் இணைந்தார். நிகழ்ச்சியில் புதுச் சேரி காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான வைத்திலிங்கம், முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி, லட்சுமிநாராயணன் எம்எல்ஏ ஆகியோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT