தமிழகம்

திமுக, அதிமுக இரட்டை வேடம்: சுப.உதயகுமார் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

திராவிடக் கட்சிகள் இரட்டை வேடம் போடுவதாக பச்சை தமிழகம் கட்சித் தலைவர் சுப. உதயகுமார் குற்றம் சாட்டினார்.

திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது:

தமிழகத்தை மாறி, மாறி ஆட்சி நடத்திவரும் திமுக, அதிமுக கட்சிகள் தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்து வருகிறார்கள். மீத்தேன் திட்டத்துக்கு கையெழு த்திட்டவர்கள், தேர்தல் வந்தவுடன் எதிர்க்கின்றனர்.

கெயில் திட்டத்துக்கு அனுமதி அளிக்கிறார்கள், தேர்தல் வந்ததும் அதை எதிர்க்கிறோம் என்கின்றனர். கூடங்குளம் அணு மின் உலை விஷயத்தில் உங்களில் ஒருவராக இருப்பேன் என்றவர், மக்கள் மீது 380 வழக்குகள் தொடர்ந்துள்ளார்.

இந்த இரண்டு கட்சிகளும் தமிழ் மக்களுக்கு ஆதரவானவர்களா, எதிரானவர்களா என எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்த இரண்டு கட்சிகளும் இரட்டைவேடம் போடுகின்றன. இவர்களின் காலம் முடிந்துவிட்டது.

முதல்வர் தன்னை சுயநலம் இல்லாதவர் எனக் கூறினாலும், அங்கேயும் ஒரு குடும்பம், ஒரு குழுமம் உட்கார்ந்து கொண்டு தமிழகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்றார்.

SCROLL FOR NEXT