தமிழகம்

சேற்றைவாரி வீசிக்கொள்ளும் திமுக, அதிமுக; நாகரிகமான பிரச்சாரத்தில் பாமக ஈடுபடும்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

செய்திப்பிரிவு

பாமக சார்பில் தயாரிக்கப் பட்டுள்ள ‘மாற்றம் - முன்னேற்றம் எழுச்சி பிரச்சாரப் பாடல்கள்’ குறுந்தகடு வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை தி.நகரில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநில துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி தலைமை தாங்கினார். செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் க.பாலு முன்னிலை வகித்தார்.

பிரச்சாரப் பாடல் குறுந்தகட்டை அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார். பூ வியாபாரி பார்வதி, துப்புரவுத் தொழிலாளர்கள் கலா, மோகன், ஆட்டோ ஓட்டுநர் ரத்தினசாமி ஆகி யோர் அதை பெற்றுக்கொண்டனர். பின்னர் நிருபர்களிடம் அன்புமணி கூறியதாவது:

கடந்த ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி பாமக முதல்வர் வேட்பாளராக என்னை அறிவித்தனர். இதை யடுத்து 8 மண்டல மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. வரும் 27-ம் தேதி வண்டலூரில் மாநில மாநாடு நடக்க உள்ளது. மாநாட்டுக்குப் பிறகு வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.

தமிழகத்தை 50 ஆண்டுகள் ஆட்சி செய்த திராவிடக் கட்சி கள் ஒருவர் மீது ஒருவர் தரம் தாழ்த்தி சேற்றைவாரி வீசி வரு கின்றனர். திமுகவினர் உத்தமர்கள் போல அதிமுகவை குறைகூறி பத்தி ரிகைகளில் விளம்பரம் கொடுக்கின் றனர். ‘என்னம்மா இப்படி பண்றீங்க ளேம்மா’ என்ற சினிமா வசனத்தை நம்பி திமுக இருக்கிறது.

மண் கொள்ளை, பால் கொள்ளை, மின்சாரக் கொள்ளை, 86 லட்சம் பேருக்கு வேலை இல்லை என்று ஒரு விளம்பரத்தை திமுக கொடுத்துள்ளது. இதை அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் செய் துள்ளன. அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த 2 கட்சிகளுக்கும் மாற்று பாமகதான். நாங்கள் நாகரிகமான பிரச்சாரத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT