தமிழகம்

பாலியல் பலாத்காரம் சிறுவன் மீது போக்சோ வழக்கு பதிவு

செய்திப்பிரிவு

மாமல்லபுரம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுவன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினர்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 4-ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி நேற்று முன்தினம் இயற்கை உபாதை கழிக்க வீட்டின் பின்னால் உள்ள முட்புதருக்கு சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் அருகில் பாழடைந்த கட்டிடத்துக்கு சிறுமியை இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, சிறுமி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து சிறுவனை பிடித்து, செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினர்.

SCROLL FOR NEXT