தமிழகம்

நகை பறித்த திருடர்களை பிடிக்க சினிமாவை மிஞ்சிய கார் ‘சேசிங்’

செய்திப்பிரிவு

வத்தலகுண்டு அருகே பெண்ணிடம் நகையைப் பறித்து பைக்கில் தப்பிய 3 பேரை காரில் சென்றவர்கள் விரட்டிச் சென்று பிடிக்க முயன்றனர்.

நிலக்கோட்டையைச் சேர்ந்த செல்வம், தனது மனைவி செல்வியுடன் திண்டுக்கல்லில் உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். சித்தையன் கோட்டை பிரிவு அருகே பின்தொடர்ந்து பைக்கில் வந்த மூவர், செல்வி அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து திண்டுக்கல் சாலையில் அதிவேகமாகச் சென்றனர். இதை காரில் பின்னால் வந்தவர்கள் பார்த்து, திருடர்களைப் பிடிக்க சினிமாவை மிஞ்சும் வகையில் `சேசிங்' செய்தனர். அப்போது பைக்கை கார் முந்துவதும், காரை பைக் முந்துவதுமாக இருந்தது. எதிரே வாகனங்கள் தொடர்ந்து வந்ததால் திருடர்கள் தப்பினர். இக்காட்சியை காரில் சென்றவர்கள் வெளியிட்டதை வைத்து மாவட்டம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். மூவரையும் விரைவில் பிடித்துவிடுவோம் என போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT