ஓரிக்கை மஹா பெரியவர் மணிமண்டபத்தில் காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன். 
தமிழகம்

ஓரிக்கை மஹா பெரியவர் மணிமண்டபத்தில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்: காஞ்சிபுரம் வழியாக காசி - ராமேஸ்வரத்துக்கு ரயில் விட கோரிக்கை

செய்திப்பிரிவு

ஓரிக்கை மஹா பெரியவர் மணி மண்டபத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று காஞ்சிபுரம் வந்தார். அவருக்கு பொன்னேரிக் கரை பகுதியில் பாஜகவினர் வரவேற்பு அளித்தனர். ஓரிக்கையில் உள்ள மஹா பெரியவர் மணிமண்டபத்தில் காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சாதுர்மாஸ்ய விரதம் இருந்து வருகிறார். அங்கு வந்த மத்திய அமைச்சர் எல்.முருகனை, மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் வரவேற்றார். இதைத் தொடர்ந்து விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து எல்.முருகன் ஆசி பெற்றார்.

அப்போது ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காசி - ராமேசுவரத்துக்கு காஞ்சிபுரம் வழியாக ரயில் விட வேண்டும் என்று அவரிடம்கோரிக்கை வைத்தார். அது பக்தர்களுக்கு வசதியாக இருக்கும் என்றும், தமிழ்நாட்டுக்கு பல்வேறுநலத் திட்டங்களை செயல்படுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து இருவரும் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர். இந்த நிகழ்ச்சியின்போது பாஜக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT