மதுரை, கோவை, தஞ்சாவூர், திரு நெல்வேலியில் ரூ.60 கோடி செல வில் மண்டல புற்றுநோய் மையங் கள் அமைக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சென்னை மருத்துவக் கல்லூரியின் முடநீக்கியல், விபத்தியல் சிகிச்சை துறை சார்பில் எலும்பு புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம் நேற்று நடைபெற்றது. புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு குணமான நோயாளிகளின் புத்துணர்ச்சி நடை பயிற்சியை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
பின்னர், அவர் பேசியதாவது:
உறுப்பு மாற்று அறுவை சிகிச் சையில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. இதற்காக பிரதமர் மோடி தனது வானொலி உரையில் தமிழக அரசை பாராட்டியுள்ளார். தமிழகம், வளர்ந்த நாடுகளுக்கு இணையான சுகாதாரத் தரத்தை அடைய வேண்டும் என்பதுதான் முதல்வரின் தொலைநோக்குத் திட்டம் 2023-ன் குறிக்கோளாகும்.
தமிழகத்தில் புற்றுநோய்க்கென ராயப்பேட்டை அரசு பொது மருத்து வமனையில் தனியாக ஒரு கட்டிடம் (பிளாக்) உருவாக்கப் பட்டுள்ளது. சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் மருந்தியல் மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சைப் பிரிவு கள் தனித்தனியாக தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
மதுரை, கோவை, தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய இடங்களில் மண்டல புற்று நோய் மையங்கள் ரூ.60 கோடி செலவில் அமைக்கப் பட்டு வருகின்றன. சென்னை அரசு பொது மருத்துவமனையில் ரூ.58.65 கோடி செலவில் புற நோயாளி பிரிவுக்கான கட்டிடம் கட்டவும், ரூ.19.65 கோடி செலவில் முடநீக்கியல் பிரிவுக்கான கட்டிடம் கட்டவும் முதல்வர் உத்தரவிட்டுள் ளார்.
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அரசு மருத்துவமனைகளில் 5 லட்சத்து 44 ஆயிரத்து 991 பேர் பயனடைந் துள்ளனர். தென் இந்தியாவிலேயே சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில்தான் எலும்பு வங்கி உள்ளது. இதனால், புற்றுநோயாளிகளுக்கான எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச் சையின்போது உடனுக்குடன் சிகிச்சை அளிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் துறை செய லாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் (பொ) ஆர்.விமலா, சென்னை மருத்துவக் கல்லூரி முடநீக்கியல். விபத்தியல் சிகிச்சை துறை இயக்குநர் (பொ) நெ.தீன் முகமது இஸ்மாயில், பேராசிரியர் வி.சிங்காரவடிவேலு உட்பட பலர் கலந்துகொண் டனர்.