தமிழ்நாடு மாநில மூலிகைத் தாவர வாரியம் சார்பில் 75-வது ஆண்டுசுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில், சென்னை அண்ணாநகரில் உள்ள அறிஞர் அண்ணா அரசு சித்த மருத்துவமனையில் ‘மக்களைத்தேடி இந்திய மருத்துவத் திட்டம்’ தொடக்க விழா நேற்று முன்தினம் நடைபெற் றது.
இந்திய மருத்துவம் மற்றும்ஓமியோபதித் துறை இயக்குநர்எஸ்.கணேஷ், இத்திட்டத்தை தொடங்கி வைத்து, மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளிடம் இயற்கை மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பின்னர் நோயாளிகளுக்கு நிலவேம்பு, வசம்பு, வெற்றிலை, ஆடாதொடை உட்பட 20-க்கும் மேற்பட்ட மூலிகைத்தாவர கன்றுகளை இலவசமாக வழங்கினார்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “பொதுமக்களின் வீடுகளிலேயே மூலிகைச் செடிகளை பயிரிட்டு, அதன்மூலம் பயனடையும் வகையில் தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் மூலிகை தாவரங்கள் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்தியாவிலேயே முதல்முறை யாக தமிழகத்துக்கு சித்த மருத்துவ பல்கலைக்கழகம் கிடைத்துள்ளது. கல்வி, ஆராய்ச்சி என சர்வதேச அளவில் சித்த மருத்துவத்தை எடுத்து செல்வதற்கு இந்த பல்கலைக்கழகம் நிச்சயம் பயன் பெறும்” என்றார்.