கைவினை கலைஞர் டி.கே.பரணி உருவாக்கிய சந்தன மரத்திலான கற்பக விருட்ச விநாயகர் சிற்பம். 
தமிழகம்

சந்தன மரத்தில் கற்பக விருட்ச விநாயகர் சிற்பம்: திருமழிசை கைவினை கலைஞர் மிகச் சிறியதாக உருவாக்கம்

செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையை சேர்ந்தவர் டி.கே.பரணி(52). கைவினை கலைஞரான இவர், தன் தாத்தா, தந்தை வழியில் அரிசி மற்றும் சந்தன மரத்தில் சிற்பங்கள் உருவாக்கும் பணியில், கடந்த 32 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்.

அரை அரிசி முதல், 4 அரிசி வரை பயன்படுத்தி, திருவள்ளுவர், தேச தந்தை மகாத்மா காந்தி உள்ளிட்டோரின் சிற்பங்களை உருவாக்கியுள்ள டி.கே.பரணி, மத்திய, மாநில அரசுகளின் விருதுகளைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சந்தன மரத்தில் 3.5 செ.மீ. உயரம், 2 செ.மீ. அகலத்தில் கற்பக விருட்ச விநாயகர் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.

கற்பக விருட்சத்தின் அடியில் 13 மி.மீ. உயர விநாயகர் அமர்ந்திருப்பது போன்றும், விநாயகர் அருகே 2 மி.மீ. உயர மூஞ்சூறு இருப்பதும் போன்றும் இச்சிற்பம் நுண்ணிய, அதி அற்புதமான வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தை உருவாக்க 2 மாதங்கள் ஆனதாக தெரிவிக்கிறார் டி.கே.பரணி.

SCROLL FOR NEXT