சாந்திலால் ஜெயின் 
தமிழகம்

இந்தியன் வங்கியின் புதிய மேலாண்மை இயக்குநர் சாந்திலால் ஜெயின் பொறுப்பேற்பு

செய்திப்பிரிவு

இந்தியன் வங்கியின் புதிய மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக சாந்திலால் ஜெயின் பொறுப்பேற்றுள்ளார்.

இவர் இதற்கு முன் பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் செயல் இயக்குநராக பணியாற்றி வந்தார். பட்டயக் கணக்காளரான இவர் அலகாபாத் வங்கியில் கடந்த 1993-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக வங்கிப் பணியை மேற்கொண்டு வரும் சாந்திலால் ஜெயின், பொது மேலாளர், தலைமை இடர் அதிகாரி, தொழில்நுட்பத் துறை தலைமை என பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்துள்ளார்.

SCROLL FOR NEXT