தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை தொடரும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி பா.கீதா இன்று (செப். 03) வெளியிட்ட அறிவிப்பு:
"வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக 03.09.2021 முதல் 05.09.2021 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி , சேலம், நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டி மீட்டரில்):
ஏத்தாப்பூர் (சேலம்) 13, பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), மணமேல்குடி (புதுக்கோட்டை), சேலம் தலா 9, ராசிபுரம் (நாமக்கல்), மதுக்கூர் (தஞ்சாவூர்) தலா 8, முத்துப்பேட்டை (திருவாரூர்), மணப்பாறை (திருச்சி), கரூர் தலா 7, பாப்பிரெட்டிப்பட்டி (தருமபுரி), அரிமளம் (புதுக்கோட்டை), பேராவூரணி (தஞ்சாவூர்) தலா 6, அரியலூர், புவனகிரி (கடலூர்), செங்கம் (திருவண்ணாமலை) தலா 5, ஊத்துக்குளி (திருப்பூர்), கிருஷ்ணகிரி, நாட்றம்பள்ளி (திருப்பத்தூர்), திருச்செங்கோடு (நாமக்கல்) தலா 4, கொடுமுடி (ஈரோடு), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), பாலக்கோடு (தருமபுரி), புதுச்சேரி, வட்டணம் (ராமநாதபுரம்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), சிட்டாம்பட்டி (மதுரை), திருத்தணி (திருவள்ளூர்), செட்டிகுளம் (பெரம்பலூர்), தேவகோட்டை (சிவகங்கை), அன்னூர் (கோவை) தலா 3.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
வங்கக் கடல் பகுதிகள்:
03.09.2021, 04.09.2021: தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதக் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
05.09.201: தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
06.09.2021, 07.09.2021: வடக்கு வங்கக் கடல், மத்திய வங்கக் கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அரபிக் கடல் பகுதிகள்:
05.09.2021 முதல் 07.09.2021 வரை: கேரள மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
03.09.2021 முதல் 07.09.2021 வரை: தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்".
இவ்வாறு பா.கீதா தெரிவித்துள்ளார்.