தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் வாக்களிக்கும் நேரம் காலை 7 முதல் இரவு 7 மணி வரை நீட்டிக் கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட் டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தும்பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே வாக்குச்சாவடிகள் அமைத்தல் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமித்தல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள், வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த கையேடுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக கடந்த 31-ம் தேதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா நோயாளிகள் வாக்களிக்க ஏதுவாக, வாக்களிக்கும் நேரத்தை தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது.
இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு பஞ்சாயத்து தேர்தல்விதிகளின்படி தேர்தலில் வாக்களிக்கும் நேரம் 10 மணி நேரத்துக்குமிகாமல் காலை 7 முதல் மாலை5.30 மணி வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
தற்போது கரோனா பரவல் சூழல் காரணமாக அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், உடல் வெப்பநிலை 98.4 ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக, கரோனா அறிகுறியுடன் இருப்போர் மற்றும் கரோனா தொற்றால்சிகிச்சை பெற்று வருவோர் வாக்களிக்க ஏதுவாக, வாக்களிக் கும் காலம், 12 மணி நேரமாக நீட்டிக்கப்படுகிறது. அதன்படி காலை 7 மணி முதல் இரவு 7மணி வரை வாக்களிக்கும் நேர மாக நிர்ணயிக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப் பட்டுள்ளது.