கூட்டணி தொடர்பாக அதிமுக உட்பட எந்தக் கட்சியுடனும் கூட் டணி பேச்சுவார்த்தைகளை இன்னும் தொடங்கவில்லை என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவா ஹிருல்லா கூறினார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர் தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 2 இடங்களில் மனித நேய மக்கள் கட்சி வெற்றி பெற்றது. தேர்தலுக்குப் பிறகு கூட்டணியில் இருந்து வெளியேறிய மமக, மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து மயிலாடு துறையில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தது. தற்போது சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணிஅமைக்க விரும்பும் அக்கட்சி யினர் விரும்புகின்றனர். இதுபற்றி அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறும்போது, “2011-ல் அதிமுகவுடன் கூட்டணி அமைந்தபோது, அக்கட்சியினர் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு தந்தனர். எனவே, அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவே விரும்புகிறோம். ஆனால், அதிமுக தலை மையிடம் இருந்து எந்த தகவலும் வர வில்லை” என்றார்.
மமகவின் தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக அக்கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹி ருல்லாவிடம் கேட்டபோது, “ இப்போது எந்தக் கருத்தையும் சொல்ல விரும்பவில்லை. அதிமுக உட்பட எந்தக் கட்சியுடனும் கூட்டணி பேச்சு வார்த்தையை இன்னும் தொடங்கவில்லை” என்றார்.