தமிழகம்

பேருந்து தினம்: காவல் ஆணையர் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற மாணவ - மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

சென்னையில் பேருந்து தினம் கொண்டாட தடை உள்ளது. தடையை மீறி பேருந்தின் மேற்கூரையின் மீது ஏறி நின்று பயணம் செய்வது, ‘பேருந்து தினம்’ என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு செய்வது போன்ற செயல்களில் கல்லூரி மாணவர்கள் ஈடுபட வேண்டாம். மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT