தமிழகம்

மீரா மிதுன் மீது 2-வது வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

செய்திப்பிரிவு

பட்டியலின மக்களைப் பற்றி அவதூறான வகையில் பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் கேரளாவில் பதுங்கியிருந்த மீரா மிதுனை கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஊழியரை மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் எழும்பூர் காவல் நிலையத்தில் நடிகை மீரா மிதுன் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நடிகை மீரா மிதுன் மீது தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT