‘சமத்துவ மக்கள் கட்சி தற்போது அதிமுக கூட்டணியில்தான் உள் ளது’ என்று அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
சமத்துவ மக்கள் கட்சி சிறப்பு பொதுக்குழு கூட்டம் திருநெல் வேலியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் சரத்குமார் பேசியதா வது: சமத்துவ மக்கள் கட்சி இயக்கத்தை ஜாதி கூட்டுக்குள் அடைக்க பார்க்கின்றனர். ஆனால் அதில் மாற்றத்தை உருவாக்கியி ருக்கிறோம். தமிழகத்தில் 2 கட்சி கள் மாறிமாறி ஆட்சிக்கு வரு வதையே ரசிக்கிறோம். ஆனால் நாம் சிறப்பாக செயல்படுவதை மக்களிடையே கொண்டுசெல்ல வில்லை.
மரத்தின் நிழலில் ஒரு செடி நின்றுகொண்டிருந்தால் அது வளர முடியாது. சூரிய ஒளிபடும்போது தான் செடி வளரும்.
தமிழக சட்டப்பேரவை தேர் தலில் எல்லாரும் தனித்தனியாக நின்றால் நாமும் தனித்து நிற் போம். கூட்டணி அமைத்து போட்டி யிடுவதா அல்லது தனித்து போட்டி யிடுவதா என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை பொதுக்குழு எனக்கு வழங்கி உள்ளது. 234 தொகுதிகளிலும் எனக்கு கூட்டம் இருக்கிறது. ஆனால் அது நிரூபிக்கப்படாமலேயே இருக்கிறது. தற்போது அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்.
உங்களில் ஒருவர் முதல்வராக வரவேண்டும் என்று நினைப்பவன் நான். உழைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். மாற்றத்துக்கு நாம் காரணமானவர்களாக இருக்க வேண்டும்.
ராகுல்காந்தி முதல்வராக வேண்டும் என்று ஒரு கட்சி தலை வர் கூறுகிறார். தமிழன் நாட்டை ஆளக்கூடாது என்பதுதான் இவர் களது எண்ணம். கர்நாடகத்திலோ, கேரளத்திலோ ஒரு தமிழன் முதல் வராக முடியுமா. தமிழனுக்கு தன் மீதே நம்பிக்கை கிடையாது.
நாம் தனியாக தேர்தலில் போட்டி யிட்டால் 12 சதவீதம் வாக்குகளை நிச்சயம் பெறுவோம். கட்சியின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றார் அவர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘பொதுக்குழு வில் பேசியவர்கள் பலர் தனித்து போட்டியிட வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அக்கருத்து பரிசீலனை செய்யப் படும்’ என்றார்.
புதிய நிர்வாகிகள்
கட்சியின் தலைவராக மீண் டும் சரத்குமார் தேர்வு செய்யப் பட்டார். பொதுச் செயலாளராக ஜெயபிரகாஷ், பொருளாளராக சுந்தரேசன், மகளிரணி செயலா ளராக ராதிகா, அவைத் தலைவ ராக செல்வராஜ், துணைத் தலை வராக காளிதாசன், துணை பொதுச் செயலாளர்களாக மணி மாறன், எஸ்.வி. கணேசன், சண்முகசுந்தரம், பன்னீர்செல்வம், கொள்கை பரப்பு செயலாளராக விவேகானந்தன் தேர்வு செய்யப் பட்டனர்.