தமிழகம்

அகவிலைப்படி வழங்கக்கோரி கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்த அரசு ஊழியர்கள்

செய்திப்பிரிவு

அகவிலைப்படியை உடனே வழங்கக்கோரி விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 4 ஆயிரம் அரசு ஊழியர்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.

கரோனா காலத்தில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அகவிலைப்படி நிறுத்தப்பட்டது. இதைக் கண்டித்தும், அகவிலைப்படியை உடனே வழங்கக் கோரியும், மத்திய அரசு வழங்கியது போல் 1.7.2021 முதல் 11 சதவிகித டிஏ வழங்கக்கோரியும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இக்கோரிக்கையை வலியுறுத்தி விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 4 ஆயிரம் அரசு ஊழியர்கள் கோரிக்கை அடங்கிய கருப்பு பேட்ஜ் அணிந்து நேற்று பணிபுரிந்தனர்.

SCROLL FOR NEXT