தமிழகம்

மீண்டும் விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் அதிமுக: பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

தமிழக அரசு முறையான புதிய நீர் பாசனக் கொள்கைகளை உருவாக்க வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

இவர் ராமநாதபுரத்தில் செய்தி யாளர்களிடம் கூறியது:

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டம் விவசாயி களுக்கு எதிராக உள்ளதால் இதை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர். தமிழக அரசு மத்திய அரசுக்கு எதிராகப் புதிய வேளாண் சட்டங்களை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என சட்டசபை யில் தீர்மானம் நிறைவேற்றியது. இப்போதும் அதிமுக எம்எல்ஏக் கள் வெளிநடப்பு செய்து மீண்டும் விவசாயிகளுக்கு எதிராக செயல் படுகின்றனர்.

தமிழகத்தில் நீர் பாசனத்தை பகிர்ந்தளிப்பதில் தொடர்ந்து குளறுபடிகள் உள்ளன. எனவே தமிழக அரசு முறையான புதிய நீர் பாசன கொள்கையை உருவாக்க வேண்டும். அதேபோல் நீர் பாசன கொள்கைகளுக்கு தனி நீதிமன்றம் ஏற்படுத்த வேண்டும்.

மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என தமிழகத்துக்கு ஆதரவாக கேரள செயல்பட வேண்டும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளோம்.தமிழக முதல்வரும் கேரள முதல்வருக்கு கடிதம் எழுது வதுடன், தொலைபேசியில் பேசி தமிழகத்துக்கு ஆதரவாக செயல்பட கேட்டுக்கொள்ள வேண்டும்.

வைகையாற்றில் 45 கி.மீட்டர் மணல் இன்றி கரு வேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதை தூர்வாரி, கரைகளை பலப் படுத்த வேண்டும் எனக் கூறினார்.

SCROLL FOR NEXT