மூப்பனார் நினைவு தினத்தையொட்டி, சென்னை தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், கட்சியின் தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர் வெங்கடேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். படம்: க.ஸ்ரீபரத் 
தமிழகம்

மூப்பனார் 20-ம் ஆண்டு நினைவு தினம்: நினைவிடத்தில் தெலங்கானா ஆளுநர் அஞ்சலி

செய்திப்பிரிவு

மறைந்த மூப்பனாரின் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த தமாகா தலைவர் ஜி.கே.மூப்பனாரின் 20-ம் ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அவரது கணவர் டாக்டர் சவுந்தரராஜன், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

மேலும், மூப்பனாரின் மகனும், தமாகா தலைவருமான ஜி.கே.வாசனும் தந்தையின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். கட்சியின் பொதுச்செயலாளர் விடியல் சேகர், தலைமை நிலைய செயலாளர்கள் ஜி.ஆர்.வெங்கடேஷ், அசோகன், மாவட்ட தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். தமாகா மாவட்டத் தலைவர்கள், மகளிரணி சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஜி.கே.வாசன் வழங்கினார்.

SCROLL FOR NEXT