தமிழகம்

தமிழக சுகாதார திட்டம்: தெலங்கானா அமைச்சர் பாராட்டு

செய்திப்பிரிவு

தெலங்கானா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே.லட்சுமிரெட்டி தலைமையில் 18 பேர் அடங்கிய குழுவினர் இரண்டு நாள் பயணமாக நேற்று சென்னை வந்தனர். முதல் நாளான நேற்று சென்னை அண்ணா சாலையில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ மனைக்கு வந்த அவர்களை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். அதன்பின் இரண்டு மாநில சுகாதாரத்துறையினரின் கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக தெலங்கானா சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே.லட்சுமிரெட்டி நிருபர்களி டம் கூறியதாவது: சுகாதார திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதில் தமிழகம் முன்னணி வகிக்கிறது. தமிழகத்தில் தாய்சேய் நலத்திட்டங்கள், பொது சுகாதார திட்டங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மகப்பேறு உதவித் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுவதை எங்கள் மாநில முதல்வர் சந்திரசேகரராவ் அறிந்தார். தமிழகத்துக்குச் சென்று அங்கு செயல்படுத் தப்படும் சுகாதாரத் திட்டங்களை நேரில் பார்வை யிட்டு, அதன் செயல்பாடுகளை அறிந்து வரும்படி தெரிவித்தார். அதன்படி சென்னைக்கு வந்துள்ளோம். தமிழகத்தில் செயல்படுத்தப் படும் பல்வேறு சுகாதாரத் திட்டங்கள் பற்றி ஆலோசனை நடத்தினோம். தமிழக சுகாதார திட்டங்களை தெலங்கானாவிலும் நடைமுறைப் படுத்த ஆர்வமாக இருக்கிறோம் என்றார்.

SCROLL FOR NEXT