தமிழகம்

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகளை சுற்றிப் பார்க்க ஐஆர்சிடிசி ஏற்பாடு: கோடை விடுமுறைக்காக புதிய திட்டங்கள் அறிவிப்பு

செய்திப்பிரிவு

கோடை விடுமுறையை முன்னிட்டு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, துபாய், மலேசியா, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளுக்கான சுற் றுலா திட்டங்களை ஐஆர்சிடிசி முதல் முறையாக அறிவித் துள்ளது.

இதுதொடர்பாக இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐஆர்சிடிசி) கூடுதல் பொது மேலாளர் எல்.ரவிக்குமார் சென்னையில் நேற்று கூறியதாவது:

பாரத தர்ஷன் சுற்றுலா, ரயில் சுற்றுலா, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கல்வி சுற்றுலா என பல்வேறு விதமான சுற்றுலா திட்டங்களை ஐஆர்சிடிசி செயல்படுத்தி வருகிறது. ரயில் மூலமாக மட்டுமின்றி, விமானம் மூலமாகவும் சென்னையில் இருந்து பல்வேறு சுற்றுலா திட்டங் களை செயல்படுத்தி வருகிறோம். சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இலங்கை, சீனா போன்ற இடங் களுக்கான சுற்றுலா திட்டங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

வரும் கோடை விடுமுறையை முன்னிட்டு பல்வேறு சுற்றுலா திட் டங்களை அறிமுகப்படுத்தியுள் ளோம். முதல்முறையாக ஐரோப் பிய நாடுகளில் இங்கிலாந்து, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல் ஜியம், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, வாடிகன் சிட்டி, இத் தாலி ஆகிய நாடுகளுக்கு செல் லும் வகையில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது 15 நாள் பயணமாகும். ஏப்ரல் 26, மே 19 ஆகிய நாட்களில் இந்த சுற்றுலா குழுவினர் புறப்படுவார்கள். தனி நபருக்கான கட்டணம் ரூ.2 லட்சத்து 49 ஆயிரம்.

அமெரிக்க சுற்றுலா பயணம் 12 நாட்களைக் கொண்டது. இது ஜூன் 30-ல் புறப்படுகிறது. இதற்கான கட்டணம் ரூ.2 லட்சத்து 79 ஆயிரம்.

இதுதவிர, 5 நாட்கள், 7 நாட்கள் கொண்ட சுற்றுலா திட்டங்களும் உள்ளன. துபாய் சுற்றுலா பயணம் (4 நாள்) பிப்ரவரி 18-ல் புறப்படுகிறது. இதற்கு கட்டணம் ரூ.58 ஆயிரத்து 700. சீன சுற்றுலா பயணம் (7 நாள்) ஜூன் 18-ல் புறப்படுகிறது. கட்டணம் ரூ.86 ஆயிரம். ஹாங்காங் மக்காவ் பயணம் (5 நாள்) மே 7-ல் புறப்படுகிறது. கட்டணம் ரூ.74 ஆயிரத்து 600. மலேசியா - சிங்கப்பூர் சுற்றுலா பயணம் (7 நாள்) ஏப்ரல் 16, மே 28 ஆகிய நாட்களில் புறப்பட உள்ளது. இதற்கு கட்டணம் ரூ.64 ஆயிரத்து 100. பாங்காக் புக்கெட் சுற்றுலா பயணம் (5 நாள்) மார்ச் 25 புறப்படுகிறது. கட்டணம் ரூ.57 ஆயிரத்து 500. இலங்கை சுற்றுலா பயணம் (5 நாள்) மார்ச் 26, மே 4-ல் புறப்படுகிறது. கட்டணம் ரூ.35 ஆயிரத்து 900.

மேற்கண்ட கட்டண தொகை யில் விமான கட்டணம், விசா, ஹோட்டலில் தங்கும் வசதி, ஏசி வாகனம், இந்திய உணவுகள், நுழைவு கட்டணம் ஆகியவை அடங்கும். இதுதொடர்பாக மேலும் தகவல்களை சென்னை 9840902918/19, 9003024169, மதுரை ரயில் நிலையம்: 9840902915, 9003140714, கோயம்புத்தூர்: 9003140655 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT