கூட்டணிக்கு எந்தக் கட்சியும் வராத விரக்தியில் கோவையில் பிரதமர் மோடி கதாகாலட்சேபம் நடத்திவிட்டு சென்றிருக்கிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
பள்ளிக்கரணை நன்னீர் சதுப்பு நிலத்தை பாதுகாக்க வலியுறுத்தி சோழிங்கநல்லூர் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு தலைமையேற்ற ஜி.ராமகிருஷ்ணன் பேசும்போது, ''மக்கள் நலக் கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து எவ்வித சச்சரவுகளும் இல்லை. தேர்தலுக்கு பிறகே, அதுகுறித்து நாங்கள் முடிவெடுப்போம்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணிக்கு எந்தக் கட்சிகளும் வராத விரக்தியில் கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி வெறும் கதாகாலட்சேபம் நடத்திவிட்டு சென்றிருக்கிறார்'' என்று பேசினார்.