கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகம் புறவழிச்சாலையில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து, கார். 
தமிழகம்

பேருந்து - கார் மோதல் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

சென்னையை அடுத்த தாம்பரத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் தொடர் விடுமுறையை ஒட்டி உதகைக்கு சுற்றுலா சென்றுவிட்டு நேற்று இரவு சேலம் வழியாக சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சென்னையிலிருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பேருந்து மீது அவர்கள் சென்ற கார் மோதியது.

இதில் காரில் பயணித்த தாம்பரத்தைச் சேர்ந்த எபினேசர், ரபேக்கா, இவான் உள்ளிட்ட 5 பேர் இறந்தனர். தியாகதுருகம் போலீஸார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களின் உடல்களை கிரேன்கள் உதவியுடன் மீட்டனர்.

காயமடைந்தவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மீட்புப் பணி தொடர்ந்து நடந்துவந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும் சிலர் உயிரிழந்திருக்கக் கூடும் என போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT