திருச்சி, வேலூர், நாமக்கல், புதுக்கோட்டை எஸ்.பி.க்கள், சென்னை, கோவை, சேலம், திருச்சி துணை ஆணையர்கள் உட்பட 13 போலீஸ் உயரதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் நகர குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையராக இருந்த எஸ்.பிரபாகரன், திருச்சி நகர குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சியில் அப்பொறுப்பில் இருந்த ஆர்.ஜெயந்தி, மதுரை நகர குற்றப்பிரிவு துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரையில் அந்தப் பொறுப்பை வகித்து வந்த ஜி.உமையாள், மதுரை மண்டல அமலாக்க பிரிவு எஸ்.பி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அப்பொறுப்பில் இருந்த ஆர்.சக்திவேல், திருச்சி நகர சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சியில் அப்பொறுப்பில் இருந்த வி.சசிமோகன், சேலம் நகர குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சிறப்பு காவல் 2-வது பட்டாலியன் (ஆவடி) துணை கமாண்டன்ட் எ.சுப்பிரமணியனுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு, தமிழ்நாடு சிறப்பு காவல் 4-வது பட்டாலியன் (கோவைப்புதூர்) கமாண்டன்ட் ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அப்பொறுப்பில் இருந்த கமாண்டன்ட் மூர்த்தி, கோவை நகர தலைமையிடத்து துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் அப்பொறுப்பில் இருந்த எஸ்.மகேஸ்வரன், நாமக்கல் எஸ்.பி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் எஸ்.பி.யாக இருந்த எஸ்.ஆர்.செந்தில்குமார், சென்னை நகர தலைமையிடத்து துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.யாக இருந்த பி.பகலவன், வேலூர் மாவட்ட எஸ்.பி.யாகவும், வேலூர் எஸ்.பி.யாக இருந்த பி.கே.செந்தில்குமாரி, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.யாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல, புதுக்கோட்டை எஸ்.பி.யாக இருந்த இ.எஸ்.உமா, திருச்சி மாவட்ட எஸ்.பி.யாகவும், திருச்சி எஸ்.பி.யாக இருந்த எஸ்.ராஜேஸ்வரி, புதுக்கோட்டை எஸ்.பி.யாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை தமிழக உள்துறை செயலர் அபூர்வ வர்மா நேற்று வெளியிட்டுள்ளார்.