பிளஸ் 2 விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு ஜூன் 9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த மே 9-ம் தேதி வெளியானது. விடைத்தாள் நகல் கேட்டு 79,953 மாணவ, மாணவிகளும், மறுகூட்டல் செய்ய வேண்டி 3,346 பேரும் விண்ணப் பித்திருந்தனர். இந்நிலையில், மாணவர்களின் விடைத்தாள் நகல்களை student.hse14rtrv.in என்ற இணையதளத்தில் அரசுத் தேர்வுத்துறை புதன்கிழமை வெளியிட்டது.
விடைத்தாள் நகல் வேண்டி விண்ணப்பித்த மாணவர்கள், தங்கள் பதிவு எண் மற்றும் விண்ணப்ப எண்ணை குறிப் பிட்டு விடைத்தாள்களை ஆன் லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மறுமதிப்பீடு, மறுகூட்டல்
விடைத்தாள் மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கான விண்ணப்பப் படிவங்களை மேற்கண்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து எடுத்துக்கொள்ளலாம். மறுகூட்டலுக்கான கட்டணம், மொழித்தாள், ஆங்கி லம், உயிரி யல் பாடங்களுக்கு தலா ரூ.305-ம், மற்ற பாடங்களுக்கு தலா ரூ.205-ம் செலுத்த வேண்டும்.
மறுமதிப்பீட்டுக்கு மொழித் தாள், ஆங்கிலம் ஆகிய பாடங்க ளுக்கு தலாரூ.1010-ம், இதர பாடங்களுக்கு தலா ரூ. 505-ம் கட்ட வேண்டும். பதிவிறக்கம் செய்யப் பட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 2 நகல்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நகலை உரிய கட்டணத்துடன் (ரொக் கமாக) சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஜூன் 9-ம் தேதி மதியம் 1 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.