தமிழகம்

முதல்வர் பிறந்தநாள் 2,108 மருத்துவ முகாம்கள்

செய்திப்பிரிவு

முதல்வரின் 68-வது பிறந்த நாளை முன்னிட்டு இன்றுமுதல் வரும் 29-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 108 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வர் ஜெயலலிதா 68-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று முதல் வரும் 29-ம் தேதி வரை பொது சுகாதாரத் துறை சார்பில் 680 தாய்சேய் நல சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

இவைதவிர அரசு தலைமை, வட்டம், வட்டம் சாரா மருத்துவ மனைகள் சார்பில் 680 பொது மருத்துவ முகாம்களும், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மனைகள் சார்பில் 680 பொது மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்களும் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் சார்பில் 68 சிறப்பு மருத்துவ முகாம்களும் என மொத்தம் 2 ஆயிரத்து 108 சிறப்பு மருத்துவ முகாம்கள் சுகாதாரத்துறை மூலமாக தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது.

இவ்வாறு சி.விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT