தமிழகம்

பாஜகவில் மார்ச் 4, 5-ம் தேதிகளில் விருப்ப மனுக்கள் ஏற்பு

செய்திப்பிரிவு

சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட மார்ச் 4, 5-ம் தேதிகளில் விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புவர்களிடம் வரும் மார்ச் 4, 5-ம் தேதிகளில் விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளன.

தனித் தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள், பெண்களுக்கு கட்டணம் ரூ.2,500. பொதுத் தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் ரூ.5,000 செலுத்த வேண்டும். மனுக்கள் பெறப்பட்ட பிறகு, தகுதியானவர்களிடம் மார்ச் 13, 14-ம் தேதிகளில் நேர்காணல் நடத்தப்படும்'' என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

SCROLL FOR NEXT