தமிழகம்

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனம்: அரசு தரப்பில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

டிஎன்பிஎஸ்சிக்கு உறுப்பினர்கள் 11 பேர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து பாமக தொடர்ந்த பொது நல வழக்கில் அரசு தரப்பில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவையின் தலைவர் வழக்கறிஞர் கே.பாலு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக் கில், ‘‘டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் பதவிக்கு 11 அதிமுக அனுதாபி களை உறுப்பினர்களாக நியமித்துள் ளனர். இது சட்டவிரோதம். எனவே அவர்களை நியமித்து பிறப்பித்த ஆணையை ரத்து செய்து, அவர்கள் அப்பதவி வகிக்க தடை விதிக்க வேண்டும்’’ என கோரியிருந்தார்.

இந்தமனு நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகி யோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து அரசு தரப்பில் பதி லளிக்க உத்தரவிட்டு விசா ரணையை வரும் மார்ச் 31-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT