வழக்கறிஞர் தொழிலில் சிறந்து விளங்க இன்றைய சட்ட மாணவர்கள் குற்றவியல் சட்டத்தை விரும்பி படிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் கூறியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற வழக் கறிஞர் சங்கம் (எம்பிஏ) மற்றும் மூத்த வழக்கறிஞர் நடராஜன் அறக் கட்டளை சார்பில் மாதிரி நீதிமன்ற போட்டிகள் சென்னையில் நடத் தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்தது.
உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆர்.சண்முக சுந்தரம் வரவேற்றார். விழாவுக்கு தலைமை வகித்து சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி சதீஷ்.கே.அக்னிஹோத்ரி பேசும்போது, “சட்டக்கல்வியை வெற்றிகரமாக படித்து முடித்தால் மட்டும் போதாது. அதை எவ்விதம் திறமையாக செயல்படுத்த வேண்டும் என்கிற வித்தையையும் கற்றுக்கொள்ள வேண்டும். பழங்காலத்தில் வழக்க றிஞர்கள் சேவை மனப்பான்மை யுடன் பணியாற்றியுள்ளனர். பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல் படக் கூடாது” என்றார்.
வெற்றி பெற்ற சட்ட மாண வர்களுக்கு பரிசுகளை வழங்கி உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் பேசியதாவது:
சட்டக் கல்லூரிகளில் ஆசிரியர் கள் நன்றாகத்தான் பாடம் நடத்து கின்றனர். மாணவர்களும் நன்றா கத்தான் படிக்கின்றனர். ஆனால் எல்லோராலும் திறம்பட வாதாட முடியவில்லை. இந்த தொழிலைக் கற்றுத்தர குருநாதர் கண்டிப்பாக தேவை. இங்கு திறமையாக தங்க ளது வாதத்திறமையை வெளிப் படுத்தி பரிசுபெற்ற மாணவர் களுக்கு நல்ல எதிர்காலம் உள் ளது. இது வெறும் கோப்பை அல்ல. உங்களுக்கு கிடைத்த பெருமை.
இப்போதுள்ள இளம் தலை முறை கார்ப்பரேட் சட்டங்களிலும், சிவில் சட்டங்களிலும்தான் அதிக கவனம் செலுத்துகிறது. குற்ற வியல் சட்டங்களை தேர்வு செய்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. நானும் ஒரு குற்றவியல் வழக்கறி ஞராக இருந்தவன்தான். குற்ற வியலில் வாதத்திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் அதிகம். அதேபோல மனநிம்மதி யும் கிடைக்கும். எனவே வழக்கறி ஞர் தொழிலில் சிறந்து விளங்க இளம் சட்ட மாணவர்கள் குற்றவியல் சட்டத்தையும் விரும்பி படிக்க வேண்டும். நீதியின் தரத்தைக் கூட்ட உண்மைக்கு எப்போதும் குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சென்னை, ஹைதரா பாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் என்.நடராஜன், எம்.ரவீந்திரன், அரவிந்த் பி.தாதர் உட்பட பலர் பங்கேற்றனர். உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலாளர் எம்.கோவிந்தராஜ் நன்றி கூறினார்.