ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: கோப்புப்படம் 
தமிழகம்

பஞ்சாப் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்துக்குக் கூடுதல் பொறுப்பு

செய்திப்பிரிவு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பஞ்சாப் ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வழங்கி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

1940-ம் ஆண்டு பிறந்த பன்வாரிலால் புரோஹித், தமிழகத்தின் 14-வது ஆளுநராக, 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொறுப்பேற்றார். அதற்கு முன்பு அவர் அசாம் மாநில ஆளுநராகப் பதவி வகித்து வந்தார். மேலும், நாக்பூர் தொகுதியிலிருந்து, இரு முறை காங்கிரஸ் சார்பாகவும், ஒருமுறை பாஜக சார்பாகவும் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாஜகவின் முக்கியத் தலைவராகவும் கருதப்பட்டவர் பன்வாரிலால்.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக, பன்வாரிலால் புரோஹித்துக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி இன்று (ஆக. 27) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT