வண்டலூரில் நடந்த பாமக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:தேர்தல் என்பது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொத்தானை அழுத்தி, அதற்கு அடையாளமாக கை விரலில் கறுப்பு மையை தடவிக் கொள்ளும் சடங்கு அல்ல. மாறாக, அடுத்த 5 ஆண்டுகளுக்கான மக்களின் தலைவிதியை தீர்மானிப்பதற்கான மாபெரும் வாய்ப்பாகும்.
தமிழகத்தில் தேர்தலின்போது, விரக்தியில் இருக்கும் மக்களுக்கு இலவசங்கள் என்ற வாக்குறுதியையும் ஓட்டுக்கு பணம் என்ற லஞ்சத்தையும் கொடுத்து விலை மதிப்பற்ற ஜனநாயக உரிமையான மக்களின் வாக்குகளை திமுகவும், அதிமுகவும் பறித்துச் செல்கின்றன. வளமையும் செழுமையும் நிறைந்த தமிழகத்தை வறட்சியும் வறுமையும் நிறைந்த மாநிலமாக மாற்றிய பெரும் பாவம் திமுக, அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகளையே சாரும்.
கல்வியை வணிகமயமாக்கி கல்விக் கட்டணக் கொள்ளையை ஊக்குவித்தது, மதுவைக் கொடுத்து மக்களைக் கெடுத்தது, உழைக்கும் திறனையும், சிந்திக்கும் திறனையும் மழுங்கடித்தது, வேளாண் தொழிலை சீரழித்து விவசாயிகளை கடனாளிகளாக்கி தற் கொலைக்கு தூண்டியது, கிரானைட், தாது மணல், ஆற்று மணல் உள்ளிட்ட இயற்கை வளங் களை கொள்ளையடிக்க துணை போனது என திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சீரழிவுகள் எண்ணிலடங் காதவை.
இந்தச் சீரழிவுகளில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டியதுதான் தமிழக மக்களின் தலையாய கடமை ஆகும். தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கான செயல் திட்டங்களையும் வழிமுறைகளையும் பாமக வெளியிட்டுள்ளது. இந்த செயல் திட்டங் களை செயல்படுத்தும் திறன் கொண்ட அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தை பீடித்துள்ள மது, ஊழல், பொருளாதார பின்னடைவு, கடன் உள்ளிட்ட அனைத்து தீமைகளையும் அகற்றி வளர்ச்சிப் பாதையில் வழி நடத்திச் செல்ல பாமக-வால் மட்டுமே முடியும். எனவே, தமிழ்நாட்டின் ஏழரை கோடி மக்களின் நன்மைக்காக வரும் தேர்தலில் 5 கோடியே 79 லட்சம் வாக்காளர் களும் அன்புமணி ராமதாஸை முதல்வராக்க வேண்டும் என இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.