புதியதொரு தமிழகம் செய்ய இந்த மாநாடு காரணமாக அமையும். அன்புமணி முதல்வரானால் மட்டுமே தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமாகும் என்று தமிழக மக்கள் கருதுகின்றனர். தமிழ கத்தில் நல்லாட்சி அமைய பல்வேறு திட்டங் களுடன் பாமக செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தின் முன்னேற்றத்துக்காக மாவட் டம் மற்றும் வட்டங்களை பிரிக்க வேண்டும். அப்போதுதான் நிர்வாகம் சீர்படும். ஆனால் திமுக, அதிமுக தங்களது சொந்த லாபத்துக்காக அதைச் செய்ய மறுக்கின்றன. கடந்த 2 மாதமாக அரசு ஊழியர்கள், செவிலியர்கள், விவசாயிகள், ஆசிரியர்கள் என பலரும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாமகவால் மட்டுமே முடியும்.
50 ஆண்டு திராவிட ஆட்சிக்கு தமிழக மக்கள் முடிவு கட்ட வேண்டும். எனவே, வரும் தேர்தலில் வெற்றி பெற்று பாமக ஆட்சி அமைக்க பாமக தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று சென்று கட்சியின் கொள்கைகளை பரப்ப வேண்டும்.