விழாவில் கலசத்தை கொண்டு சென்ற நடிகர் யோகிபாபு. 
தமிழகம்

நடிகர் யோகி பாபு கட்டிய வராகி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா

செய்திப்பிரிவு

செய்யாறு அருகே மேல் நாகரம்பேடு கிராமத்தில் நடிகர் யோகி பாபு கட்டிய வராகி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மேல்நாகரம்பேடு கிராமத்தில் நடிகர் யோகிபாபு, வராகி அம்மன் கோயிலை கட்டியுள்ளார். இக்கோயி லின் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது. விநாயகர் பூஜையுடன் யாக பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தது.

இதையடுத்து, புனித நீர் நிரப்பப்பட்ட கலசம் புறப்பாடு நடைபெற்றது. கலசத்தை நடிகர் யோகிபாபுவும் கொண்டு சென்றார். மங்கள இசை ஒலிக்க கோபுர கலசம் மீது புனித நீர் ஊற்றப்பட்டது.

அதன்பிறகு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

இந்த குடமுழுக்கு விழாவில் நடிகர் யோகிபாபு மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT