தமிழகம்

செஞ்சி அருகே கிணற்றில் மூழ்கி இரு சிறுவர்கள் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

செஞ்சி சக்கராபுரத்தை சேர்ந்த ஷேக்முகமது என்பவரின் மகன் சல்மான் (13). அதே பகுதியைச் சேர்ந்த அப்துல்ஜபார் மகன் ரகுமான் (9). இதில் சல்மான் 8-ம் வகுப்பும், ரகுமான் 4-ம் வகுப்பும் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.

இவர்கள் இருவரும் நேற்று சக்கராபுரத்தை அடுத்துள்ள பொன்பத்தி கிராமத்தில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றனர். இருவருக்கும் நீச்சல் தெரியாது. குளித்துக் கொண்டிருந்த போது ஒருவர் பின் ஒருவராக கிணற்றில் தவறி, மூழ்கி உயிரிழந்தனர்.

சில மணி நேரம் கழித்து, கிணற்றில் உடல் மிதப்பதைக் கண்ட கிராமத்தினர் செஞ்சி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். பின்னர் இருவரது உடல்களையும் மீட்டு செஞ்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இரண்டு பேரின் உடல்களும் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT