மத்திய, மாநில அரசுகளின் விருதுபெற்ற மருத்துவர் கு.கணேசனுக்கு பாராட்டு விழா, ராஜபாளையத்தில் இம்மாதம் 29-ம் தேதி நடைபெற உள்ளது.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றம் சார்பில், ராஜபாளையம் சேம்பர் ஆப் காமர்ஸ் வளாகத்தில் இவ்விழா வரும் 29-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. எழுத்துலகில் 40 ஆண்டுகள் என்ற தலைப்பில் மருத்துவர் கு.கணே சனுக்கு நடத்தப்படும் இப்பாராட்டு விழாவில், இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவர் டாக்டர் அறம் தலைமை வகிக்கிறார். கிளை துணைத் தலைவர் ரமணி வரவேற்கிறார். கிளைத் தலைவர் ஆனந்தி, ராஜபாளையம் இந்திய மருத்துவர் சங்கத் தலைவர் ஜவகர்லால் ஆகியோர் வாழ்த்துரை ஆற்றுகின்றனர்.
"இந்து தமிழ் திசை" நாளி தழின் "மருத்துவ நட்சத்திரம்" விருதுபெற்ற விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் த.அறம், கு.கணேசன், பி.வி.ஜவகர்லால், ஜெ.சண்முகராஜன் ஆகியோருக்கு ராஜபாளையம் கம்பன் கழக துணைத் தலைவர் கோபால்சாமி, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற நிர்வாகி ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு செய்கின்றனர். அதைத்தொடர்ந்து, மருத்துவர் கு.கணேசனின் வசீ கரிக்கும் எழுத்தாளுமை குறித்த கருத்தரங்கம் நடைபெறுகிறது. அதில் மருத்துவரின் இலக்கிய முகம் எனும் தலைப்பில் எழுத் தாளர் கவிபாலா, சமூக பொறுப்புணர்வு தலைப்பில் கவிஞர் கண்மணிராசா, புதிய கலைச்சொற்கள் உருவாக்கம் என்ற தலைப் பில் ராஜபாளையம் உமா சங்கர், யாவரையும் ஈர்க்கும் மொழி என்ற தலைப்பில் கவிதா ஜவகரும் பேசுகின்றனர். மருத்துவர் கு.கணேசன் ஏற்புரையாற்றுகிறார். கவிஞர் நாகா நன்றி கூறுகிறார். ஏற்பாடு களை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ராஜபாளையம் கிளை நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர்.