பெற்றோரால் விட்டு செல்லப்பட்ட குழந்தை. 
தமிழகம்

பழநியில் ஒரு வயது பெண் குழந்தையை விட்டுச்சென்ற பெற்றோர்

செய்திப்பிரிவு

பழநி பேருந்து நிலை யம் அருகே நேற்று காலை ஒரு வயது பெண் குழந்தை ஒன்று தனியாக விடப்பட்ட நிலையில் இருந்தது. இதுகுறித்து அப்பகுதி யில் இருந்தவர்கள் போலீஸாருக்கு தக வல் கொடுத்தனர். குழந்தையை விட்டுச்சென்றது யார் என்பது குறித்து போலீஸார் விசா ரணை நடத்தினர்.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், ராமநாதபுரத்தில் இருந்து பழநி வந்த அரசு பேருந்தில் பயணித்த தம்பதி குழந்தையை பழநி பேருந்துநிலையத்தில் விட்டுவிட்டு மீண்டும் அதே பேருந்தில் ஊர் திரும்பியது தெரிய வந்தது. குழந்தையின் பெற்றோர் குறித்த விவரம் தெரியவந்தால் பழநி அனைத்து மகளிர் காவல்நிலையம் 9498101569 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என போலீஸார் கேட்டுக் கொண்டனர்.

SCROLL FOR NEXT