தமிழகம்

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி சென்னையை நோக்கி மிதிவண்டி பிரச்சாரம்

செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி, தருமபுரியில் இருந்து சென்னை கோட்டையை நோக்கி மிதிவண்டி விழிப்புணர்வு பிரச்சார பயணம் நடைபெற்று வருகிறது.

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ‘மக்கள் குழு’ என்ற அமைப்பினர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட் டங்களில், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியு றுத்தி இந்த விழிப்பு ணர்வு பிரச்சார பயணத்தில் ஈடுபட்டுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் இருந்து சென்னை கோட்டையை நோக்கி மிதிவண்டியில் பயணமாக செல் லும் இந்த குழுவினர் நேற்று காஞ்சி புரம் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்துக்கு வந்தனர். நீர்நிலை ஆக்கி ரமிப்புகளால் ஏற்பட்ட பாதிப்பு கள் குறித்து துண்டு பிரசுரங் களை பொதுமக்களிடம் விநியோ கித்தினர்.

இதுகுறித்து, மக்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பியுஸ் மானுஷ் கூறியதாவது: நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்ட தாலேயே நகரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதை அனைவரும் உணர்ந்துள் ளோம். ஆனால், இத்தனை பெரிய பாதிப்பு ஏற்பட்டும் நீர்நிலை ஆக்கி ரமிப்பு களை அகற்ற அரசு முனைப்பு காட்டவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒருசில மாவட் டங்களில் பெயரளவுக்கே ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.

அதனால், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அரசுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில், ‘மாரி அம்மா உத்தரவு’ என்ற தலைப்பில் தருமபுரி மாவட்டத்தில் இருந்து ஜன. 29-ம் தேதி மிதி வண்டியில் 8 பேர் கொண்ட குழுவாக சென்னை கோட்டை நோக்கி புறப்பட்டோம். தற்போது காஞ்சிபுரம் வந்துள்ளோம். வழி யெங்கிலும், மக்களுக்கு விழிப் புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி வருகிறோம் என்றார்.

          
SCROLL FOR NEXT