ஒத்தக்கடை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த அலங்கார வளைவு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள். 
தமிழகம்

முன்னாள் மாணவர்கள் உதவியுடன் அரசு பள்ளியில் அலங்கார வளைவு

செய்திப்பிரிவு

மதுரை யா.ஒத்தக்கடை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் நிதி உதவியுடன் அலங்கார வளைவு கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

யா.ஒத்தக்கடை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1990 முதல் 1997 வரை பயின்ற மாணவர்கள் ஒன்றிணைந்து கடந்த ஆண்டு ரூ.1 லட்சம் செலவில் பள்ளிக்குத் தண்ணீர் தொட்டி கட்டிக் கொடுத்தனர்.

தற்போது பள்ளிக்கு அலங்கார வளைவு கட்டிக்கொடுக்க முன் வந்துள்ளனர். இந்த வளைவுக்கான அனைத்துச் செலவையும் முன்னாள் மாணவர்கள் ஏற்ப தாகக் கூறியுள்ளனர்.

அலங்கார வளைவு கட்டு வதற்கான அடிக்கல் நாட்டு விழா தலைமை ஆசிரியர் வினோத் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT