தமிழகத்தில் 2 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மே 7 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பதவியேற்றபின், முக்கிய மற்றும் உயர் பொறுப்பில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் 2 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இன்று (ஆக. 24) வெளியிட்ட அறிவிப்பு:
1. தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராகப் பதவி வகித்துவரும் டிஜிபி பிரதீப் வி. பிலிப், காலியாக உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியின் (சென்னை) டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. ஆப்பரேஷன்ஸ் பிரிவின் (சென்னை) ஏடிஜிபியாகப் பதவி வகித்துவரும் அமல்ராஜ், தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அடுத்த உத்தரவு வரும் வரை ஆப்பரேஷன்ஸ் பிரிவின் (சென்னை) ஏடிஜிபியாக அமல்ராஜ் நீடிப்பார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.