கூட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன். 
தமிழகம்

குடிசை மாற்று வாரிய ஊழலை விசாரிக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள தரமற்ற வீடுகள் உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் தெரி வித்தார்.

பழநியில் மார்க்சிஸ்ட் நிர் வாகிகள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசின் மக்கள் விரோதச் செயல்கள், பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், வேளாண் புதிய சட்டங்கள் உள்ளிட்டவை குறித்து மக்களிடம் தெரிவிக்க ‘மோடி அரசாங்கத்தின் குற்றப் பத்திரிகைகள்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் இரண்டாயிரம் இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்த உள்ளோம்.

அதிமுக ஆட்சியின்போது நடைபெற்ற கோடநாடு கொள் ளை, கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது முழு விசாரணை நடத்த வேண்டும். குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள தர மற்ற வீடுகள் உள்ளிட்ட பல் வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்களிடம் தீவிர விசாரணை நடத்த வேண்டும்.

நெற்பயிருக்கான பயிர் காப்பீடு ரத்து செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காப்பீடு இல்லாவிட்டாலும், பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் நெற்பயிருக்கு இழப்பீடு வழங் கவேண்டும். தமிழகத்தில் ஆட்சி க்கு வர முடியாது என்பதால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் மற்றும் ஆளுநர் போன்ற முக்கிய பதவிகளை கொடுத்து ஆசைகாட்டி மாற்று கட்சியில் இருந்து ஆட்களை இழுக்கும் வேலையை மத்திய பாஜக அரசு உள்நோக்கத்துடன் செய்து வருகிறது. அரசு ஊழியர் களுக்கான அகவிலைப்படியை வழங்க தமிழக அரசை வலியுறுத் துவோம். இவ்வாறு அவர் கூறினார். திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கமலக்கண்ணன், பழநி நகராட்சி முன்னாள் தலைவர் ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT