காளையார்கோவில் அருகே மல்லல் கருப்பன் கோயில் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலையுடன் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் மற்றும் ஊர் மக்கள். 
தமிழகம்

காளையார்கோவில் அருகே 10-ம் நூற்றாண்டு புத்தர் சிலை கண்டெடுப்பு

செய்திப்பிரிவு

காளையார்கோவில் அருகே கண்டெடுக்கப்பட்ட 10-ம் நூற்றாண்டு புத்தர் சிலை, பழமையான முக்கால் அடி உயர சிவலிங்கத்தை அரசு அருங்காட்சியகத்தில் வட்டாட் சியர் ஒப்படைத்தார்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே மல்லல் கருப்பன் கோயில் பகுதியில் திறந்தவெளியில் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை மண்ணில் புதைந்திருப்பதை அப்பகுதி மக்கள் கண்டறிந்தனர். அச்சி லையை மீட்டு கோயில் கட்ட முயன்றனர்.

தகவலறிந்த வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் அச்சிலையை மீட்டு எடுத்துச்சென்றார். அமர்ந்த நிலையில் உள்ள இந்த புத்தர் சிலையின் உயரம் 4 அடியாகவும், அகலம் 3 அடியாகவும் உள்ளது.

அதேபோல், மறவமங்கலம் அருகே சிரமம் வண்ணான் கண்மாயில் கிராம மக்கள் சிலர் மீன்பிடித்தபோது, பழமை யான முக்கால் அடி உயர கல்லால் ஆன சிவலிங்கத்தைக் கண்டெடுத்தனர். அதை வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் மீட்டு அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றார். பின்னர், புத்தர் சிலையையும், சிவ லிங்கத்தையும் அரசு அருங் காட்சியகத்தில் காப்பாட்சியர் பக்கிரிசாமியிடம் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் ஒப்படைத்தார்.

SCROLL FOR NEXT