முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜை முன்னிலைப்படுத்தி தேர்தலை சந்திக்க உள்ளதாக ‘மாற்றத்துக்கான இளைஞர் கூட்டமைப்பு’ என்ற அமைப்பு அறிவித்துள்ளது.
பட்டதாரி இளைஞர்களைக் கொண்ட இந்த அமைப்பு கோவையில் அதற்கான தேர்தல் பணிகளையும் மேற்கொண்டுள்ளது. இக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான சாமுவேல் சர்ச்சில் கூறியதாவது: ‘வழக்கமான அரசியல் கட்சிகளிடம் கிடைக்காத ஒரு மாற்றத்தை இளைஞர்களால் கொடுக்க முடியும் என ஆலோசித்து எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க உள்ளோம். ஐஏஎஸ் அதிகாரி சகாயம், தேர்தலில் போட்டியிட்டால் அவரை ஆதரிக் கத் தயாரானோம். ஆனால் அவர் மறுத்து விட்டதால் அப்துல் கலாமின் ஆலோசகர் வி.பொன்ராஜை தேர்வு செய்துள்ளோம். வரும் 26-ம் தேதி மதுரையில் பேரணியாகச் சென்று அவரைத் தலைமையேற்க அழைப்பு விடுக்க உள்ளோம் என்றார்.