தமிழகம்

ஆவின் பால் கலப்பட வழக்கு: சிபிசிஐடி போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல்

செய்திப்பிரிவு

ஆவின் பால் கலப்பட வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீஸார் நேற்று விழுப்புரம் தலைமை குற்ற வியல் நீதிமன்றத்தில் குற்றப்பத் திரிகையை தாக்கல் செய்தனர்.

திண்டிவனம் அருகே உள்ள வெள்ளிமேடுபேட்டை போலீஸார் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட ஆவின் பால் லாரி அந்த பகுதியில் உள்ள ஏழுமலை என்பவரது நிலத்தில் நின்றுகொண்டிருந்தது. அந்த லாரியில் இருந்த ஆவின் பாலை திருடி அதற்கு பதிலாக டேங்கரில் தண்ணீர் ஊற்றி கலப் படம் செய்வது தெரியவந்தது. இதையடுத்து கலப்படம் செய்த தாக 8 பேரை போலீஸார் கைது செய் தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப் பட்டது.

விசாரணையில், சென்னையை சேர்ந்த ஒப்பந்ததாரர் வைத்திய நாதனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து சிபிசிஐடி போலீஸார் வைத்திய நாதனை கைது செய்தனர். இந்த வழக்கில் 23 பேர் கைது செய்யப் பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீஸார் நேற்று விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சுபா அன்புமணி முன்னிலையில் குற்றம் சாற்றப்பட்ட 23 பேர் மற்றும் ஆவின் ஊழியர்கள் 5 பேர் உட்பட 28 பேர் மீது இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

SCROLL FOR NEXT