திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த காருக்குள் சிக்கி அதன் ஓட்டுநர் உயிரிழந்தார்.
திருச்சி–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சித்தாநத்தம் பிரிவு சாலையில், நேற்று சாலை மையத் தடுப்பையொட்டி நின்ற ஒரு கார், தீப்பற்றி கரும்புகை யுடன் எரிந்து கொண்டிருந்தது.
அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, ஓட்டுநர் இருக் கையில் ஒருவர் இறந்து கிடப்பது தெரியவந்தது. தகவலறிந்து மணப்பாறை தீயணைப்பு நிலை யத்தினர் அங்கு செல்வதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.
சம்பவ இடத்துக்கு மணப் பாறை போலீஸார் வந்து, காருக் குள் உயிரிழந்து கிடந்தவரின் சடலத்தை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், காருக்குள் தீயில் கருகி உயிரிழந்து கிடந்தவர் திருச்சி தென்னூர் மூலைக் கொல்லைத் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் நாராயணன்(32) என்பதும், வாடகை கார் ஓட்டுநரான அவர், தனக்கு சொந்த மான காரில் மதுரைக்கு சவாரி சென்று விட்டு, அவர்மட்டும் திருச்சி நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்து மணப்பாறை போலீஸார் விசாரித்து வருகின் றனர்.