ஸ்டெம் செல் சிகிச்சை அளிப்பதில் சென்னை வடபழநி சிம்ஸ் மருத்துவமனை முன்னிலை வகிப்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
இது தொடர்பாக சிம்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பரிக்ஷையா(31) வெண்புற்று நோயால் (மைலோடிஸ் பிளாஸ் டிக் சிண்ட்ரோம்) பாதிக்கப்பட்டார். இதனால் இவருக்கு ரத்த அணுக் களின் எண்ணிக்கை குறைந்து தலைசுற்றல், மயக்கம், உணர்வு இழப்பு ஏற்பட்டது. எனவே அவருக்கு தொடர்ந்து ரத்தம் செலுத்தும் நிலை ஏற்பட்டது.
இதனால் அவர் சிம்ஸ் மருத் துவமனையில் அனுமதிக்கப்பட் டார். ஆபத்தான நிலையில் இருந்த அவர் குணமடைய ஸ்டெம் செல் சிகிச்சை மட்டுமே தீர்வு என மருத்துவர்கள் ஆலோ சனை வழங்கினர்.
பரிக்ஷையா உடன் பிறந்தவர் கள் யாரும் இல்லாததால் அவ ருக்கு ஸ்டெம் செல்லை தானமாகப் பெறும் வாய்ப்பு இல்லை. இந் நிலையில் அவரது தந்தையின் ஸ்டெம் செல் 50 சதவீதம் அளவுக்கு ஒத்துப்போனதால் அதனைக் கொண்டு ஹெப்லோ எனப்படும் ஒத்த அலோஜெனிக் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
வரப்பிரசாதம்
ஹெப்லோ ஒத்த எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை குறித்து சிம்ஸ் மருத்துவமனை புற்றுநோய் மருத்துவ மூத்த ஆலோசகர் மற்றும் இயக்குநர் டாக்டர் ரஞ்சன் குமார் மகாபாத்ரா கூறும்போது, “ஸ்டெம் செல் துறையில் ஹெப்லோ ஒத்த எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை ஒரு வரப்பிரசாதமாகும். அஃபிரெசிஸ் என்னும் நவீன இயந்திரம் மூலம் பரிக்ஷையாவின் தந்தையின் உடலிலிருந்து ஸ்டெம் செல்கள் எடுக்கப்பட்டன.
பின்னர் அவை கடந்த ஜனவரி 12-ம் தேதி பரிக்ஷையாவின் உடலில் அறுவை சிகிச்சை மூலம் செலுத்தப்பட்டன. அறுவை சிகிச்சை முடிந்த 14 நாட்களில் ரத்த அணுக்கள் அதிகரிக்கத் தொடங்கின. 35-ம் நாளில் நோயாளி குணமடையும் அறிகுறிகள் தெரிந்தன” என்றார்.
பரிக்ஷையா கூறும்போது, “நவீன அறுவை சிகிச்சை மூலம் எனக்கு புத்தம் புதிய வாழ்க்கை தந்த சிம்ஸ் மருத்துவமனை குழுவுக்கு மனமார்ந்த நன்றிகள். விரைவில் வீடு திரும்பி முன்போல் இயல்பான வாழ்க்கை வாழ்வேன் என நம்புகிறேன்’’ என்றார்.