அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயில் மணவாள மாமுனிகள் மடத்தின் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனத் தெரித்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழகத்தில் பாரம்பரியமாக இருக்கக் கூடிய அனைத்து கோயில்களிலும் அந்தந்த ஆகம விதிகளின் படியே பூஜைகள் நடைபெற வேண்டும்.
அதேபோல், இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் நடைமுறைகளை மாற்றுவதற்கு உரிமை கிடையாது. இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் கூட உள்ளது.
நமது பாரம்பரியமான சம்பிரதாயத்தை மாற்றுவது தமிழக அரசுக்குநல்லது இல்லை. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை, தமிழக அரசு நீக்க வேண் டும்.
பாரம்பரியம் மாறாமல் எப்போதும்போல் அந்தந்த கோயில்களில் அந்தந்த ஆகம விதிகளின்படியே பூஜைகள் நடக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிடுவார் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.